பாக். கொள்வனவு செய்த தாக்குதல் ட்ரோன்கள் தொழில்நுட்ப கோளாறுகளால் கிடப்பில்

சீனாவில் இருந்து பாகிஸ்தான் விமானப் படைக்கு அனுப்பப்பட்ட மூன்று தாக்குதல்கள் ட்ரோன்கள் மோசமான தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சீனாவில் இருந்து இவை பாகிஸ்தானை வந்தடைந்தன. விண்ணில் இருந்து விண்ணுக்கும் மற்றும் விண்ணில் இருந்து தரை இலக்குகளுக்கும் லேசர் குண்டுகளையும் ஏவுகணைகளையும் ஏவக் கூடிய திறன் படைத்த தாக்குதல் ட்ரோன்கள் எனவும் இத்தகைய ட்ரோன்களை பாகிஸ்தானிலேயே சீன உதவியுடன் தயாரிக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அறிய முடிகிறது.

இந்த ட்ரோன்களோடு தரப்பட்ட உதிரிப்பாகங்கள் தரமற்றவை என்பதால் திருத்தங்களை செய்ய முடியாதிருப்பதாகவும், பழுதுபார்ப்பதற்காக சீனாவில் இருந்து வந்த தொழில்நுட்பவியலாளர்கள் தகுதியானவர்களாக இல்லை என்றும் பாக். விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ட்ரோன்களின் ஜி.பி.எஸ். கருவிகள் பழுதடைந்திருப்பதாலும் கமராவில் நைட்ரஜன் ஒழுக்கு இருப்பதாகவும், ராடர் கருவிகள் பழுதடைந்திருப்பதாகவும் இவற்றின் திறனை பரீட்சிக்க முடியாதிருப்பதாக விமானப்படை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மலைப்பாங்கான பிரதேசங்களில் தரை இலக்குகளைத் தாக்குவதற்கு இந்த ட்ரோன்களை பயன்படுத்த முடியும் எனவும் இந்திய எல்லைப் படையினருக்கு இவை சவால் விடும் எனவும் பாக். விமானப்படை எதிர்பார்த்திருந்தது.

Mon, 09/20/2021 - 16:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை