ஓய்வூதியத்தை பெறுவதற்காக இறந்த தாயுடன் வாழ்ந்த மகன்

ஆஸ்திரியாவில் தாயின் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்காக அவரது இறந்த உடலை பதப்படுத்தி வைத்திருந்ததாக ஆடவர் ஒவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் 89 வயதான அந்தப் பெண் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இயற்கை காரணத்தால் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தனது தாயின் உடலை பாதால அறையில் வைத்து ஐஸ் கட்டிகளை பயன்படுத்தி துர்நாற்றம் வராது கட்டுகளை இட்டு வைத்திருந்ததாக 66 வயதான மகன் குறிப்பிட்டுள்ளார். சட்ட விரோதமான முறையில் தாயின் 50,000 யூரோ ஓய்வூதியப் பணத்தை பெற்று வந்ததாக அந்த மகன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

மேற்கு டெய்ரோல் பிராந்தியத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், புதிதாக வந்த தபால்காரர் ஓய்வூதியத்தை வழங்க அந்த பெண்ணை பார்க்க வேண்டும் என்று கோரியதாலேயே இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தனது தாயை காண்பிக்க அந்த ஆடவர் மறுத்ததை அடுத்து இது பற்றி பொலிசார் விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடித்துள்ளனர்.

Sun, 09/12/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை