அரைவாசிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கி முன்மாதிரி

இலங்கைக்கு WHO அமைப்பு பாராட்டு

இலங்கையின் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமைக்கு உலக சுகாதார அமைப்பு இலங்கையை பாராட்டியுள்ளது.

இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை வரையில் நாட்டு மக்களில் ஒரு கோடி 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் நேற்று முன்தினம் வரையில் 02 கோடி 48 இலட்சத்து 3,998 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு கோடியே 10 இலட்சத்து 54 ஆயிரத்து 101 பேருக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 09/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை