பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானியர்கள் நிர்க்கதி

தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய நிலையில் பாகிஸ்தானுக்குள் நுழையும் எதிர்பார்ப்புடன் ஆயிரக்கணக்கான ஆப்கான் நட்டவர்கள் ஸ்பின் போல்டொக் பகுதியில் நிர்க்கதியாகி உள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாக தெற்கு கந்தஹார் மாகாணமான ஸ்பின் பொல்டொக் மாவட்டத்தில் பல ஆப்கானியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் நிர்க்கதியாகி இருப்பதாக பஞ்வோர் ஆப்கான் நியுஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்த குடும்பங்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புகின்றன. ஆனால் பாகிஸ்தான் இராணுவம் அவர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது பாகிஸ்தான் அடையாள அட்டை மற்றும் கந்தஹார் அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்படுகிறது.

ஒரு வாரத்திற்கு முன் வடக்கு நகரான மசாரே சரீபில் இருந்நு வந்திருக்கும் அப்துல் வதூத் என்பவர், தமது குடும்பத்தின் எதிர்காலம் பற்றி பயப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Fri, 09/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை