சாய்ந்தமருதில் ஊரடங்கில் உலாவிய மூவர் கொரோனா தொற்றாளராக அடையாளம்

சாய்ந்தமருதில் ஊரடங்கில் உலாவிய மூவர் கொரோனா தொற்றாளராக அடையாளம்-3 Tested Positive While Roaming the Street-Sainthamaruthu

- தேவையற்ற வகையில் கொரோனாவை வீட்டுக்கு கொண்டு சேர்க்க வேண்டாம்

ஊரடங்கு காலப் பகுதியில் சட்ட திட்டங்களை மதிக்காமல் வீதியில் உலாவித் திரிந்த 37 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 3 பேர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வேலைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இக்காலக்கட்டத்தில் எவ்வித காரணங்களுமின்றி வீதியில் உலாவித்திருந்தோருக்கு எதிராக சுகாதாரத்துறையினரும், பாதுகாப்பு படையினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சாய்ந்தமருதில் ஊரடங்கில் உலாவிய மூவர் கொரோனா தொற்றாளராக அடையாளம்-3 Tested Positive While Roaming the Street-Sainthamaruthu

அதன் ஒரு பகுதியாக சாய்ந்தமருதில் அத்தியவசிய தேவையின்றி வெளியேறிய 20 நபர்களுக்கு PCR பரிசோதனையும் 17 நபர்களுக்கு Antigen பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதில குறித்த மூவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். அல் அமீன் றிசாட், நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளுமாறும், வீட்டைவிட்டு தேவையில்லாமல் வெளியேறி வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்றை கொண்டு சேர்க்காமல் சுகாதார துறையினருக்கும், இந்த கொரோனா ஆட்கொல்லி நோயை கட்டுப்படுத்த போராடிக்  கொண்டிருப்பவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

(நூருல் ஹுதா உமர்)

Sat, 09/04/2021 - 13:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை