பால்மா, கோதுமை மா, சீமெந்து: விலைகள் அதிகரிக்க அனுமதியுள்ள நிறுவனங்களுக்கு கடும் நிபந்தனை

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிப்பு

பால்மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரித்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்த நிபந்தனைகள் நுகர்வோரை பாதுகாப்பதாக அமையும் என்றும் அதிகார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விலை அதிகரிப்பு மேற்கொண்ட பின்னர் தொடர்ந்தும் சந்தைகளுக்கு அப் பொருட்களை விநியோகித்தல், விநியோகம் தொடர்பான விபரங்களை நுகர்வோர் அதிகார சபைக்கு அறிக்கையிடல், விலைகள் அதிகரிக்கப்பட்டு மூன்று மாத காலங்களுக்கு மீண்டும் விலை அதிகரிப்பை கோராமல் இருத்தல்,

மேற்படி நிறுவனங்கள் வெளிநாட்டிலுள்ள அதன் தாய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி டொலர் செலுத்தாமல் ஆறு மாதங்களுக்கு விநியோகங்களை மேற்கொள்ளுதல் ஆகியவை தொடர்பில் பொது மக்களை பாதுகாக்கும் வகையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 
Wed, 09/22/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை