தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் இரு வாரம் நீடிக்கவும்

நல்ல பலன் கிடைக்குமென சுதர்ஷனி கருத்து

நாட்டில் நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என்பது தமது தனிப்பட்ட கருத்தாகும் என கொரோனா வைரஸ்கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் நாட்டில் புதிதாக இனங்காணப்பட்டு வரும் நோயாளர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது சமூகத்தில் மேலும் சுமார் ஐம்பதினாயிரம் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நாளாந்தம் 5000 கொரோனா வைரஸ் தொற்றுநோயாளிகள் புதிதாக இனங்காணப்பட்டு வருவதை சுகாதாரத் துறை விசேட நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். அதற்கிணங்க சமூகத்தில் சுமார் 50 ஆயிரம் தொற்றாளர்கள் இருக்கலாம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்த லுக்கான ஊரடங்குச் சட்டத்தை மேலும் இரண்டு வார காலங்கள் நீடிப்பது சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 09/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை