மிலிந்த மொரகொடவின் நற்சான்றுப் பத்திரம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை?

மிலிந்த மொரகொடவின் நற்சான்றுப் பத்திரம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை?-Indian High Commission Denies Reports on Non-Acceptance of Credential of Milinda Moragoda

- செய்தி தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகரகம் மறுப்புத் தெரிவிப்பு

இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமனம் பெற்றுள்ள மிலிந்த மொரகொடவின் நற்சான்றுப் பத்திரம், இந்தியாவினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் குறித்த மறுப்பு அறிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

புதுடில்லிக்கு சென்றுள்ள மிலிந்த மொரகொடவின் நற்சான்றுப் பத்திரம் குறித்து வெளியாகியுள்ள பல்வேறு ஊடக அறிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளவரின் 'நற் சான்றுப்பத்திரத்தை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தொடர்பான செய்திகளில் உண்மையில்லையென தெளிவுபடுத்தியுள்ளது.

Mon, 09/06/2021 - 21:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை