நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம்

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது.அதேபோல், சிறந்த கல்லூரிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 3 கல்லூரிகள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.

மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான 'டாப் 10' பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று வெளியிட்டுள்ளார்.

அதில், ஒட்டுமொத்தமாக சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனமும், மூன்றாம் இடத்தில் மும்பை ஐஐடியும் உள்ளன.

சிறந்த பல்கலைகள் பட்டியலில் பெங்களூர் ஐஐடி முதலிடத்திலும், டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலை 2ம் இடத்திலும், வாரணாசியில் உள்ள பணாரஸ் ஹிந்து பல்கலை 3வது இடத்திலும் உள்ளது.

கோவையை சேர்ந்த அமிர்தா விஸ்வ வித்ய பீடம் பல்கலை 5வது இடத்தை பிடித்து உள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்தது. டில்லி ஐஐடி 2ம் இடமும், மும்பை ஐஐடி 3ம் இடமும் பிடித்தது.

Fri, 09/10/2021 - 16:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை