அவசரகால வர்த்தமானியை திரும்பப் பெறுமாறு சஜித் பிரேமதாச, ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

அவசரகால வர்த்தமானியை உடனடியாக திரும்பப் பெறுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் போர்வையில் அவசரகால நிலையை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது அரசாங்கத்தின் தவறான செயல் என்பதுடன் தமது தோல்விகளை மூடி மறைக்கும் ஒரு தன்னிச்சையான தீர்மானமாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சகூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

''2003ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நுகர்வோர் விவகாரச் சட்டத்தின் மூலம் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் செயல்பாட்டைதிறம்படச் செய்ய முடியும். அவசர நிலையை அவசர அவசரமாகக் கொண்டு வருவதன் மூலம் அரசாங்கம் இன்னும் ஆபத்தான நிலையை நோக்கி நாட்டை இழுத்துச் செல்கிறது.

அரசாங்கம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினாலும் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அது குறைக்காது. தேவையான எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை நாடு பெறாது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு அவசர நிலை உதவாது.

Fri, 09/03/2021 - 09:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை