இந்தியா–சிங்கப்பூருக்கிடையே கடற்படை போர் ஒத்திகை நிறைவு

இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையிலான 28 ஆவது இரு தரப்பு கடல்சார் போர் ஒத்திகை கடந்த செப்டெம்பர் 2 தொடக்கம் 4 ஆம் திகதி வரை நடைபெற்றதாக இந்திய கடற்படை அறிவித்துள்ளது.

தென் சீனக் கடற்பகுதியில் சர்வதேச தண்ணீர் எல்லைக்குட்பட்ட தெற்கு வட்டா ரத்தில் தொடர்பற்ற முறையில் ‘சிம்பெக்ஸ் 2021’ என்னும் இப்பயிற்சி நடை பெற்றது.

மெய்நிகர் திட்டமிடல் அம்சமும் பயிற்சியில் அடங்கும். ஆகாயம், கடல் நீர்மட்டம், நீருக்கு அடியில் என பலதரப்பட்ட சாகசச் செயல்களில் இரு நாட்டு வீரர்களும் ஈடுபட்டனர்.

இராணுவங்களுக்கு இடையிலான தொடர்பாடல் மற்றும் சைபர் பாதுகாப்பு என இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான பாதுகாப்பு உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இரு கடற்படைகளுக்கும் இடையே பரஸ்பரம் நீர்மூழ்கி கப்பல் மீட்பு உதவி மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றும் அண்மையில் கைச்சாத்தானமை குறிப்பிடத்தக்கது.

Fri, 09/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை