நாட்டை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்க உத்தேசம்

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு

நான்கு வாரங்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வைரஸ் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் கொரோனா மரணங்களும் குறைவடைந்து வருவதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அதற்கிணங்க எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டை படிப்படியாக திறக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டை மீண்டும் திறப்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவி விசேட மருத்துவ நிபுணர் பத்மா குணரத்ன கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த போது:

தற்போதைய நாட்டின் கொரோனா வைரஸ் அலை எச்சரிக்கையானது குறைவடையவில்லை என்றும் இத்தகைய சூழ்நிலையில் நாட்டை முழுமையாக திறப்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 
Wed, 09/15/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை