மொடர்னா தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி எப்படி?

அடுத்த வாரத்திற்குள் ஆய்வறிக்கை வரும்

மொடர்னா தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். மொடர்னா தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த ஆய்வு நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் ஸ்புட்னிக் - வி தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வு அடுத்த மாத முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தற்போது நாட்டில் பரவும் டெல்டா திரிபின் உப திரிபுகள் பரவுகின்றதா? என்பது தொடர்பான பரிசோதனைகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் சைனோபாம் தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Mon, 09/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை