போலி கொவிட் தடுப்பூசி மருந்து அமெரிக்காவுக்கு கடத்தல்

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக தரமற்ற கொவிட் தடுப்பு மருந்துகள் கடத்தப்பட்டு வருவதாகவும் சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட தடுப்பூசி மருந்துகளும் இவற்றில் அடக்கம் என்றும் அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சிகாகோ, மெம்பிஸ், எங்கரேஜ், அலாஸ்கா ஆகிய பகுதிகளில் இதுவரை ஆறாயிரத்துக்கும் அதிகமான தடுப்பூசி மருந்து தொகுதிகள் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக சுங்கத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

வெவ்வேறு வகையான கொவிட் திரிபுகள் காணப்படும் நிலையில் சில வர்த்தகர்கள் மலிவான, தரமற்ற தடுப்பூசி மருந்துகளை சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வருவதால் நாட்டு மக்களின் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கப்படுவதாக பிட்ஸ்பேர்க் சுங்கத்துறை பணிப்பாளர் வில்லியம் ஃபிட்டிங் கூறியுள்ளார்.

Mon, 09/20/2021 - 14:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை