சம்பந்தன் ஐயாவின் சொற்படி நடக்கவும்

மறுப்பது கட்சிக்கு முரணான செயல்

 

தலைவர் சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாட்டினை மறுத்து செயற்பட்டால் அது இலங்கை தமிழரசுக்கட்சி கட்சிக்கு முரணான விடயம் என்பதுடன் அதனை பலவீனப்படுத்தும் செயற்பாடு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள மட்டு.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தினை மீறி ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியதாக வெளியான கடிதம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் என எட்டு உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

வடக்கு,கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டும்தான் தமிழ் பிரதிநிதிகளை உருவாக்கிய கட்சி. அந்த நிலைப்பாட்டினை கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நிராகரித்துள்ளதாகவும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.வடக்கு,கிழக்கில் தமிழர்கள் மீது பொலிஸாரின் கெடுபிடிகள் அதிகரித்துவருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

Thu, 09/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை