லிட்ரோ நிறுவனம் பாரிய நெருக்கடியில்

ஒரு சிலிண்டர் 847 ரூபா நட்டத்தில் விற்பனை

கையிருப்பில் இருக்கும் லிட்ரோ எரிவாயு பழைய விலைக்கே விற்பனை செய்யப்படுவதால் அந்த நிறுவனம் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் 80 சதவீதம் பாவனையில் உள்ள லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனானது 847 ரூபா நட்டத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் லிட்ரோ நிறுவனத்திற்கு நாளொன்றில் 80 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதோடு, மாதத்திற்கு 2.2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு மத்தியில் லிட்ரோ நிறுவனம் இந்த நட்டத்தினை எதிர்நோக்கியுள்ளது. லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனானது 1, 493 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன், லாஃப்ஸ் சமையல் எரிவாயுவினை 363 ரூபாவினால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை கடந்த 13ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தது.

 

Wed, 09/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை