மட்டக்களப்பில் தகனசாலை ஒன்று அவசியத் தேவை

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின் தகனசாலையொன்றை அமைக்குமாறு, மாவட்ட போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சனி மட்டக்களப்பு மாநகரசபை முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கொவிட்-19 காரணமான உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்ய பொலன்னறுவை மாவட்டத்துக்கு பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் கொண்டு செல்லவேண்டியுள்ளதாக அவர் தமது கடித்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்த 202 சடலங்களில் 27 சடலங்கள் சுகாதார நடைமுறைகளுக்கமைய தகனம் செய்யப்பட்டுள்ளன. இந்த சடலங்களை தகனம் செய்வதற்கு மட்டக்களப்பிலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பொலன்னறுவை மாவட்டத்திலமைந்துள்ள மின் தகனசாலைக்கு கொண்டு செல்லவேண்டியுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tue, 09/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை