மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்

இலங்கையின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் தமது 72வது வயதில் திருகோணமலையில் காலமானார். கடந்த சில நாட்களாக சுகவீனமுற்றிருந்த அவர் நேற்று காலை காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவிலை பிறப்பிடமாக கொண்ட அவர், தமது ஆரம்ப கல்வியை மட்டுவில் கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திரு இருதயக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார்.

இதனையடுத்து அவர் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிப சங்க இயக்கத்தில் இணைந்து செயற்பட்ட அவர் இலக்கியத்துறை மற்றும் சமூகச் செயற்பாடுகளிலும் முன்நின்று செயற்பட்டவராவார். 1967 ஆம் ஆண்டும் எழுத்துத்துறையில் தடம்பதித்த அவர் கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, விமர்சனக்கட்டுரை ஆகிய துறைகளில் தமது ஆளுமையைச் செலுத்தியுள்ளார். அவருடைய பத்தி எழுத்துக்கள் மற்றும் கட்டுரைகள் சில வ.தேவசகாயம், தாவீது கிறிஸ்ரோ ஆகிய பெயர்களிலும் வெளிவந்துள்ளன.

 

Fri, 09/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை