பதவி விலகல் மட்டும் போதாது; லொஹான் ரத்வத்த கைதுசெய்யப்பட வேண்டும்

சுமந்திரன் எம்.பி கோரிக்கை

சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த பதவி விலகியமை மாத்திரம் போதுமானது கிடையாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சுமந்திரன் எம்.பி இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டு, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரியுள்ளார்.

Thu, 09/16/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை