இலங்கையருக்கான பயணத்தடையை நீக்கியது ஜப்பான்

கொவிட் அபாயம் காரணமாக இலங்கை உட்பட பல நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்க ஜப்பானிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இன்று (20) முதல் இலங்கை, இந்தியா, மாலைத்தீவு, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

டெல்டா கொவிட் திரிபு அவதானத்தை கருத்திற் கொண்டு கடந்த ஜூன் மாதம் ஜப்பானிய அரசால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் கொவிட் பரிசோதனைக்கு மேலதிகமாக மூன்று நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. கொவிட் தொற்று நோய்க்கான சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க பிரிட்டன் சில தினங்களுக்கு முன் தீர்மானித்திருந்தது. எதிர்வரும் 22 ம் திகதி முதல் இலங்கையை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Mon, 09/20/2021 - 13:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை