பஞ்ச்ஷீர் மாகாண உரிமை மீறல்கள் குற்றச்சாட்டை தலிபான்கள் மறுப்பு

ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை தலிபான்கள் தலைமையிலான அரசின் தகவல் மற்றும் கலாசார பிரதியமைச்சர் ஜபியுல்லா முஜாஹித் மறுத்துள்ளார்.

பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலிபான் போராளிகள் எவ்விதமான போர்க்குற்றத்திலும் ஈடுபடவில்லை. மனித உரிமைகள் கண்காணிப்பகம் பஞ்ச்ஷீர் மாகாணத்திற்கு சென்று அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க அனுமதி வழங்கப்படும். ஆனாலும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வீழ்ச்சியடைந்த நபரான எதிரியின் புனையப்பட்ட தகவல்களைப் பரப்பவும், பாரபட்சமாக செயல்படவும் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டதாக ‘காமா பிரஸ் ஏஜென்ஸி’ தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் காபுல் அரசாங்கம் கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி தலிபான்களிடம் வீழ்ச்சியடைந்த பின்னர் அவர்களுக்கு எதிராகப் போராடும் தேசிய எதிர்ப்பு முன்னணியின் கோட்டையாக பஞ்ச்ஷீர் மாகாணம் விளங்கியது. அம்முன்னணியின் போராளிகளுக்கு ஆப்கானிஸ்தானின் மறைந்த கெரில்லா தளபதி அஹ்மத் ஷா மசூத்தின் மகன் அஹமத் மசூத் தலைமை தாங்கியுள்ளார்.

அஹ்மத் மசூத் மற்றும் அம்ருல்லா சலேஹ் தலைமையிலான தேசிய எதிர்ப்பு முன்னணியின் கோட்டையாக பஞ்ச்ஷீர் மாகாணம் இருந்ததோடு, அம்ருல்லா சலேஹ் தன்னை தற்காலிக ஜனாதிபதியாக அறிவித்தமையும் தெரிந்ததே.

Fri, 09/17/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை