ரஷ்ய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: ஐவர் பலி

ரஷ்யாவின் பேர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை காலை பல்கலைக்கழத்திற்குள் நுழைந்த அடையாளம் வெளியிடப்படாத அந்த துப்பாக்கிதாரி கண்மூடித்தனமாக சூடு நடத்த ஆரம்பித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக பணியாளர்கள் அறைகளுக்குள் பூட்டிக்கொண்டு பாதுகாப்புப் பெற்றுள்ளனர். இதன்போது சிலர் ஜன்னல்களில் இருந்து வெளியே பாய்ந்து தப்பித்துள்ளனர்.

இதனால் சிலருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக அந்தப் பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிதாரி பின்னர் கைது செய்யப்பட்டதாக ரஷ்ய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அது தெரிவித்தது. தலைநகர் மொஸ்கோவில் இருந்து கிழக்காக 1,300 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் பேர்ன் அரச பல்கலைக்கழகத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Tue, 09/21/2021 - 11:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை