ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் யேமனுக்கான இலங்கைத் தூதுவராகவும் பதவியேற்பு

ஓமான் நாட்டுக்கான தற்போதைய இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் யேமன் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராகவும் பதவியேற்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ நியமன ஆவணங்களை தூதுவர் அமீர் அஜ்வத், யேமன் நாட்டு ஜனாதிபதி அப்துல் றப்புஹ் மன்சூர் அல்ஹாதியிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தார். சவூதி அரேபியாவின் தலைநகர் றியாதில் அமைந்துள்ள யேமன் நாட்டு ஜனாதிபதியின் தற்காலிக அரச மாளிகையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், தனது பாரியார் அஸ்மியா அமீர் அஜ்வத் சகிதம் கலந்து கொண்டார். இலங்கையின் புதிய தூதுவரை வரவேற்ற யேமன் ஜனாதிபதி அல்ஹாதி இருதரப்பு உறவுகளை மேலும் வளர்ப்பதில் தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தூதூவரின் பணிகள் வெற்றிகரமாக அமைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

 

Wed, 09/01/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை