இடா புயல்: நியூயோர்க் நகரத்தில் அவசர நிலை

இடா வெப்பமண்டல புயல் காரணமாக கடும் மழை மற்றும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நியூயோர்க் நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நகரில் வரலாறு காணாத மழை காரணமாக கொடிய வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு வீதிகள் மோசமான நிலையில் இருப்பதாக மேயர் பில் டி பிளசியோ தெரிவித்துள்ளார். சுரங்க ரயில் நிலையங்கள், வீடுகள் மற்றும் வீதிகளில் நீர் நிரம்பி இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

நியூயோர்க் சென்டர் பார்க் பகுதியில் ஒரு மணி நேரத்தில் 3.15 அங்குலம் அளவு மழைவீழ்ச்சி பதிவாகி இருப்பதாக தேசிய காலநிலை சேவை தெரிவித்துள்ளது.

நியு ஜேர்சியிலும் அவசர நிலை பிறப்பிக்கட்டிருப்பதோடு அங்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். பிசைக்கில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக உள்ளூர் மேயர் தெரிவித்துள்ளார். அதே மாநிலத்தின் மில்லிகா ஹில்லில் புயல் காரணமாக குறைந்தது ஒன்பது வீடுகள் சேதமடைந்துள்ளன.

 

Fri, 09/03/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை