கோதுமை மாவின் விலையை அதிகரிக்காமலிருக்க அரசு தீர்மானம்

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு

கோதுமை மாவின் விலையை அதிகரிக்காமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலை தொடர்பில் இறக்குமதி நிறுவனத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையையடுத்தே அரசாங்கம் அத்தகைய தீர்மானத்தை மேற்கொண்டதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் நேற்று தெரிவிக்கையில்:

சில தினங்களாக கோதுமை மாவின் விலையை 12 ரூபாவால் அதிகரித்துள்ளதாக சமூகத்தில் பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதனையடுத்து ஜனாதிபதியின் செயலாளரும் நிதி அமைச்சின் செயலாளரும் கோதுமை மா இறக்குமதியாளர்கள் சங்க முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் நேற்றைய தினம் சம்பந்தப்பட்ட இரு இறக்குமதி நிறுவனங்களிலும் விலை அதிகரிப்பை மேற்கொள்ளப் போவதில்லை என என்னிடம் தெரிவித்துள்ளன.

அதற்கிணங்க சாதாரண உபயோகத்திற்காக கொள்வனவு செய்யப்படும் கோதுமை மா மற்றும் பேக்கரி உற்பத்திகளுக்கு பயன் படுத்தப்படும் கோதுமை மாவின் விலைகளில் எந்த காரணத்திற்காகவும் அதிகரிப்பு மேற்கொள்ளப் போவதில்லை என அந்த சங்கத்தினர் தெரிவித்தனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 
Mon, 09/06/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை