கொரோனாவை கட்டுப்படுத்த பொருளாதார செயல்முறையை பராமரிப்பதே அரசின் நோக்கம்

அமைச்சர் நிமல் லான்சா தெரிவிப்பு

தனிமைப்படுத்தப்பட்ட காலத்திலும் அதற்குப் பிறகும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டில் பொருளாதார செயல்முறையை பராமரிப்பது மிகவும் முக்கியம், இல்லையெனில் அனைத்து மக்களும் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்குமென கிராமப்புற சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு அமைச்சர் நிமல் லான்சா கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் தடுப்பூசி திட்டங்கள், மருத்துவமனை சேவைகளின் கட்டுப்பாடு, அவர்களுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் மக்களுக்கு நிவாரணம் போன்றவற்றுக்கு அரசாங்கம் அதிகளவு பணத்தை செலவிடுகிறது. இவை அனைத்துக்கும், நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்க வேண்டும். இல்லையெனில், கொவிட்19 எதிர்ப்பு திட்டம் மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு துறையும் சரிந்துவிடும். எனவே, இச் சூழ்நிலையின் மத்தியிலும் மக்களைப் பாதுகாப்பதில் முன்னுரிமை அளித்து, பொருளாதார செயல்முறையைப் பேணுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த நடவடிக்கைகளை நாம் பாராட்ட வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் மற்றும் அதற்குப் பிறகு, நாங்கள் அனைவரும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறைகளின் அர்ப்பணிப்பு வீணாகிவிடும். நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடையும். எனவே, நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் நிமல் லான்சா கூறினார்.

Fri, 09/03/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை