அமெரிக்காவில் அனுமதிக்கப்படும் அகதிகளை இரட்டிப்பாக்கத் திட்டம்

அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது அங்கு 62,500 அகதிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை 125,000க்கு அதிகரிக்கப்படும்.

அதன் தொடர்பில், உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சுடனும், பாராளுமன்றத்துடனும் வெளியுறவு அமைச்சு ஆலோசனை நடத்தவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், அகதிகள் திட்டத்தில் செய்த மாற்றங்களில் திருத்தம் கொண்டுவர பைடன் நிர்வாகம் உறுதியளித்திருந்தது. முன்னர், ஒரே நேரத்தில் 15,000 அகதிகளை மட்டுமே அமெரிக்காவுக்குள் அனுமதிக்க முடியும்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், அமெரிக்கா கூடுதலான அகதிகளை அனுமதிக்க வேண்டும் என்று பிற நாடுகளும் வலியுறுத்துகின்றன. 

பல்வேறு நிலைகளில் சுமார் 40,000 ஆப்கானியர்கள் ஏற்கனவே அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் எத்தனை பேர் அகதி நிலையில் ஏற்கப்படுகின்றனர் என்பது உறுதி செய்யப்படாதுள்ளது.

Wed, 09/22/2021 - 10:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை