மக்களின் பாவனைக்காக சிங்கராஜ வன ஊடான வீதி

விரைவில் கையளிக்கப்படும் என்கிறார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

 

சிங்கராஜ வன பகுதி ஊடாக லங்கா கமவிலிருந்து நெலுவ வரையான வீதி சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வீதியை அமைக்க நாங்கள் எந்த மரத்தையும் வெட்டவில்லை. விரைவில் மக்களின் பாவனைக்காக பாதை கையளிக்கப்படும் என நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். லங்காகம – நெலுவ வீதியின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு   பதிலளிக்கும்போதே நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், எதிர்க்கட்சிகள் தலைமையிலான அரசியல் கட்சிகள் லங்காகம முதல் நெலுவ வரையில் வீதி நிர்மாணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சாலை அமைக்க வீதி நிர்மாணிக்கப்படும்போது அவர்கள் யாரும் அதனை வரவேற்கவில்லை. ஜேவிபி பல்வேறு தனி நபர்களை ஒன்றிணைத்து இந்த வீதி அமைப்பதற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்தது. இந்த வீதியை நிர்மாணிக்க நாங்கள் எந்தவொரு மரத்தையும் வெட்டவில்லை. இந்த வீதி நிர்மாணிப்பணிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நேரடி மேற்பார்வையின் கீழ் இராணுவத்தின் பொறியியல் படையணியால் மேற்கொள்ளப்படுகிறது.நிர்மாணப்பணிகள் 98% நிறைவடைந்துள்ளன.

விரைவில் மக்களின் பாவனைக்காக இதனை கையளிக்க இருக்கிறோம். கொவிட் நிலையிலும் இந்த வீதியை நிர்மாணிப்பதற்கு உந்துசக்தி அளிக்கும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷவுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

Thu, 09/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை