உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி

தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அறிவிப்பு

மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு பைஸர் தடுப்பூசிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால், தடுப்பூசி தொடர்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

சம்பிக்க ரணவக்க விசேட கூற்றை முன்வைத்து கூறுகையில்,

உயர்தர மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு கூடிய விரைவில் அவற்றை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். உயர்தரப் பரீட்சையின் முக்கியத்துவம் தொடர்பில் அறிந்து செயற்படுமாறு கேட்கின்றேன் என்றார். இதன்போது பதிலளித்து அமைச்சர் தினேஸ் குணவர்தன கூறுகையில்,

இந்த விடயம் தொடர்பில் கடந்த வாரத்தில் ஜனாதிபதியினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு இது தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன. முதலாவதாக உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டு அது தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 09/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை