பொருளாதாரத்தை வலுப்படுத்த தேசிய தொழில்முனைவோரை அரசாங்கம் ஊக்குவிக்கிறது

கொவிட்-19 தொற்றுப்பரவலால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நமக்குத் தேவையானதை நாமே உற்பத்தி செய்ய உள்ளூர் தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் நாட்டின் பொருளாதார இலக்குகளை மேலும் வலுப்படுத்தப்படுத்தவுமே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முயற்சிகள் அமைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

நம் நாட்டிலுள்ள உள்ளூர் தொழில்முனைவோர் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை உள்நாட்டில் தயாரிக்க முன்வந்துள்ளனர். குறிப்பாக சுகாதாரத் துறைக்கு நன்மை பயக்கும் சில மருந்துகள் மற்றும் சேலைன் போன்ற பொருட்கள் மீது கவனம் அதிகரித்து வருகிறது. கொவிட்-19 தொற்றுநோயை எதிர்கொண்டு எங்களது ஏற்றுமதிகளை எங்களால் பராமரிக்க முடிந்துள்ளது. அத்துடன் சில இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் கடந்த காலங்களில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கிடையேயான இடைவெளியை குறைக்க முடிந்தது.

கோவிட்-19 தொற்றுப்பரவலால் நம் நாட்டின் வருவாய் குறைவாகவே உள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் சுங்க வருவாய் உட்பட பல துறைகளில் நம் நாட்டிற்கான வருவாய் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது அல்லது இழந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையை நிர்வகிக்க, கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கும், புதிய நோயாளிகளை அடையாளம் காண்பதற்கான சோதனையை அதிகரிப்பதற்கும், உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவமனை வசதிகளை அதிகரிப்பதற்கும், சுகாதார ஊழியர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்கும் அரசு கூடுதல் செலவுகளைச் செய்ய வேண்டியுள்ளது. தனிமைப்படுத்தல் மையங்களை பராமரிக்கவும் வேண்டியுள்ளது.

குறைப்பும் இல்லாமல் வழங்கப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாதவர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு கடன் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கமும் பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் கோவிட்-19 தொற்றுநோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கவும் வலுப்படுத்தவும் உள்ளூர் தொழில்முனைவோரை வலுப்படுத்தவும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது. பொதுச் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளவும் தடுப்பூசி வழங்கல் திட்டத்தை முழுமையாக வெற்றியடையச் செய்ய முடியுமென்றும் இராஜாங்கஅமைச்சர் நிமல் லான்சா மேலும் கூறினார்.

Tue, 09/14/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை