சில கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்பட வாய்ப்பு

நாளைய கலந்துரையாடலில் தீர்மானம்

 

எதிர்வரும் வாரம் சில கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை திறப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் தேசிய கொவிட் தடுப்புச் செயலணி கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். நாட்டை திறப்பதற்கான பரிந்துரைகள் குறித்து இந்த வாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பரிந்துரைகளின் படி நாடு திறக்கப்படும் முறை தொடர்பாக தீர்மானிக்கப்படும் என்றும் நாடு திறக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Thu, 09/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை