தம்மை இறைதூதரென கூறிய பெண்ணுக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் தம்மை இறைதூதர் என்று கூறிய பாடசாலை ஒன்றின் பெண் அதிபருக்கு லாஹூர் நகர உள்ளூர் நீதிமன்றம் ஒன்று மரண தண்டை விதித்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சல்மா தன்வீர் என்ற பெண்ணுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரச தரப்பு வழக்கறிஞரால் முடிந்திருப்பதோடு அவர் குற்றச்செயலில் ஈடுபடும்போது நல்ல மனநிலையில் இருக்கவில்லை என்பதை நிரூபிக்க பிரதிவாதிகள் தவறியுள்ளனர்.

இதனை அடுத்து அவரை சாகும்வரை தூக்கிலிடுவதற்கு உத்தரவிட்டிருக்கும் நீதிபதி 50,000 ரூபா அபராதமும் விதித்துள்ளார்.

சல்மா 2013 ஆம் ஆண்டு தாம் இறைதூதர் என்றும் முஹமது நபி இறுதித் தூதர் என்பதை மறுத்தும் பிரசுரம் ஒன்றை எழுதி தமது பிரதேசத்தில் இருப்பவர்களுக்கு வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் பொலிஸில் முறையிட்டதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Thu, 09/30/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை