சர்வதேச ஊடகங்களின் செய்திகள் அடிப்படையற்றவை

இராஜாங்க அமைச்சர் கப்ரால்

சீனாவின் கடன்பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளதால் நாட்டில் நிதி மற்றும் உணவு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை அடிப்படையற்றது என தெரிவித்துள்ள நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சர்  அஜித் நிவாரட் கப்ரால்,கொவிட் தாக்கத்தினால் இலங்கை மாத்திரமல்ல பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்த நாடுகள் கூட ஏதோவொரு வழிமுறையில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,நாட்டு மக்கள் அனைவருக்கும் இம்மாதத்திற்குள் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்தி சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறுகிய காலத்திற்குள் எம்மால் சீர் செய்ய முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாரட்கப்ரால் தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 09/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை