ஊரடங்கு நீடிக்கப்படுமா?; தீர்மானம் இன்று அறிவிக்கப்படும்

நாடு முழுவதும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா, இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் இன்று (10) ஆம் திகதி எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொவிட்-19 தடுப்புக்கான செயலணி இன்று 10 ஆம் திகதி கூடுகிறது. இந்த கூட்டத்திலேயே, தீர்மானம் எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்திருக்கும் இவ்வேளையில், கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் கடந்த மாதம் 30ஆம் திகதி வரை முதற்கட்ட ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. எனினும், கொவிட்19 நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வராத பின்னணியில், 30ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை அந்த ஊரடங்கு நீடிக்கப்பட்டது. அந்த நிலையிலும், கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராததால், ஊரடங்கு எதிர்வரும் 13ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்க ஜனாதிபதி தலைமையிலான கொவிட்-19 தடுப்பு செயலணி தீர்மானித்தது.

கொரோனா மரணங்கள் நாளொன்றில் 200 ஐ தாண்டி கடந்த காலங்களில் பதிவாகியிருந்ததுடன், கடந்த ஓரிரு தினங்களாக அந்த எண்ணிக்கை 185 வரை குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

இந்த நிலையில், கடந்த வார அறிக்கைகளை ஆராய்ந்து, இன்று ஊரடங்கை நீடிப்பதா, இல்லையா என்ற தீர்மானம் எட்டப்படுமென சுகாதார தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

லோரன்ஸ் செல்வநாயகம்

 
Fri, 09/10/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை