மணல் ஏற்றி வந்த லொறி மின்கம்பத்துடன் மோதி விபத்து

மணல் ஏற்றி வந்த லொறி மின்கம்பத்துடன் மோதி விபத்து-Lorry Accident-Kokkaddicholai

கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட தேவிலாமுனை பிரதான வீதியில் லொறியொன்று விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது.

காஞ்சிரங்குடா பகுதியில் இருந்து மணற்பிட்டி பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறியொன்று மின்கம்பத்தில் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மணல் ஏற்றி வந்த லொறி மின்கம்பத்துடன் மோதி விபத்து-Lorry Accident-Kokkaddicholai

விபத்தில் மின்கம்பம் முறிந்து  லொறியின் மீது வீழ்ந்துள்ளது.

லொறியினை செலுத்திச் சென்ற சாரதி எவ்வித பாதிப்புமின்றி உயிர்தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மணல் ஏற்றி வந்த லொறி மின்கம்பத்துடன் மோதி விபத்து-Lorry Accident-Kokkaddicholai

(கொக்கட்டிச்சோலை நிருபர் - வீ. துஷாந்தன்) 

Sat, 09/04/2021 - 12:18

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை