ஆசியாவில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான மாநாடு; கொவிட் தொற்றிலிருந்து உலகை காக்க நிபுணத்துவத்தை பகிர்வோம்

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வேண்டுகோள்

இடைத் தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டுக்கு (Conference on Interaction and Confidence Building Measures in Asia) முக்கிய வகிபாகம் இருப்பதுடன், தற்போதைய சூழ்நிலையில் மகத்தான சேவைகளை வழங்க வேண்டுமென தெரிவித்த வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கொவிட்- தொற்றுநோயிலிருந்து உலகம் வெளிவர முயற்சிக்கும் போது அனுபவங்களையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்வது நன்மை பயப்பதாக இருக்கும் என்றும் தெரித்துள்ளார்.

ஆசியாவில் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டின் நிறைவேற்றுப் பணிப்பானர் கைராட் சாரிபே நியூயோர்க்கில் அமைச்சர் (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸை மரியாதை நிமித்தம் சந்தித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டின் பணியானது, அதன் உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களை மையமாகக் கொண்டு அதன் பொதுவான நோக்கங்களால் வழிநடத்தப்படல் வேண்டுமென அமைச்சர் பீரிஸ் வலியுறுத்தினார்.

இந்த அமைப்பை ஆதரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதுடன், இந்த மாநாட்டினால் உலகிற்கு பல பயனுள்ள நுண்ணறிவுகளை வழங்க முடியுமென நம்பிக்கை வெளியிட்டார். 27 உறுப்பு நாடுகளும் வலுவான நிறுவனங்களைக் கொண்டுள்ளதாகவும், கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து உலகம் வெளிவர முயற்சிக்கும் போது அனுபவங்களையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்வது நன்மை பயப்பதாக இருக்கும் என்றும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

உட்கட்டமைப்பு, கல்வி, தொழிற்பயிற்சி, சுற்றுச்சூழல் பிரச்சினைகள், கிராமப்புற வறுமையைத் தணித்தல், பெறுமதி உட்சேர்க்கப்பட்ட ஏற்றுமதி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி ஆகிய துறைகளிலான ஒத்துழைப்பானது, ஆசியாவில் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் இம் மாநாடு பின்பற்றக்கூடிய முக்கிய துறைகளாகும் என வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழல் குறித்து குறிப்பிடுகையில், சுற்றுச்சூழலின் பெறுமதியில் பொருளாதார அபிவிருத்தி நிலையானதல்ல என்பதை ஒப்புக்கொண்டதுடன், இரசாயன அடிப்படையிலான உரங்களிலிருந்து இயற்கை உரங்களுக்கு மாறுவதன் மூலம் பசுமைப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை சுட்டிக் காட்டினார். நாடுகள் தமது மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது முக்கியம் எனினும், அனைத்து சமூகங்களுக்கும், குறிப்பாக கிராமப்புற சமூகங்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அது சமமான விநியோகத்தை உறுதி செய்யும் விதத்தில் அமைதல் வேண்டுமென அமைச்சர் பீரிஸ் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த மாநாட்டின் செயற்பாடுகள் குறித்து நிறைவேற்றுப் பணிப்பானர் சாரிபே அமைச்சருக்கு விளக்கியதுடன், 2021 அக்டோபரில் அமைச்சர்கள் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் முக்கிய நபர்களின் குழுவை நிறுவுவதற்கான திட்டங்களை சுட்டிக் காட்டினார். உறுப்பு நாடுகளிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காக ஆசியாவில் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான மாநாடு அதன் அதிகபட்ச நடவடிககைகளை மேற்கொள்ளுமென அவர் தெரிவித்தார்.

இந்த மாநாடு 1992 இல் நிறுவப்பட்டதுடன், இது ஆசியாவில் சமாதானம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான ஒரு பன்னாட்டு மன்றமாகும். இது 27 உறுப்பு நாடுகள், 09 பார்வையாளர் அந்தஸ்த்துள்ள நாடுகள் மற்றும் 05 பார்வையாளர் அந்தஸ்த்துள்ள அமைப்புக்களை உள்ளடக்கியது. ஆசியாவில் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டிற்கான பார்வையாளர் அந்தஸ்தை 2012 இலும், முழு அந்தஸ்தை 2018 இலும் இலங்கை பெற்றது

Wed, 09/22/2021 - 08:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை