குடாஓயா ஆற்றில் குவியும் குப்பைகள்; மகாவலி ஆறு மாசடையும் அபாயம்

ஹற்றன் - நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள குடாஓயா ஆற்றில் குப்பைகளை கொட்டுவதால் மகாவலி ஆற்று நீர் அசுத்தப்படுத்துவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மகாவலி ஆற்றுக்கு நீர் வழங்கும் ஆறுகளில் கிளை ஆறாக குடாஓயா ஆறு விளங்குகின்றது.

இதனால் அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதால் ஆற்று நீர் மாசடைந்துவருகின்றது

ஹற்றன் - டிக்கோயா நகரசபை பகுதியில் சேருகின்ற கழிவுகள் கொட்டும் இடமாக கடந்த காலங்களில் குடாஓயா குப்பைக்குழி காணப்பட்டது. இதனால் சுற்றுப்புற சூழலுக்கு பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டன. குறிப்பாக இதனால் மகாவலி ஆற்றுநீர் மாசடைந்து வருகின்றது. அத்தோடு நுவரெலியாவுக்கு செல்லும் பிரதான பாதையில் குறித்த குப்பைக்குழி அமைந்திருப்பதால் பயணிகள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.

அதுமட்டுமின்றி மக்கள் வாழும் பகுதியில் குப்பைக்குழி காணப்படுகின்றது.

இதனால் பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை செய்து குப்பை கொட்டுவதனை நிறுத்தினர். எனினும் பிரதேசத்திலுள்ள ஒரு சிலரும் வீதியில் செல்பவர்களும் குறித்த பாலம் அமைந்துள்ள பகுதியில் எவரும் இல்லாத நேரத்தில் வீசிவிட்டு செல்வதாக இதனால் மீண்டும் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மகாவலி கங்கையின் நீர் அசுத்தமடையக்கூடிய நிலை காணப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். மகாவலி கங்கை நீர் மாசடைவதால் இந்த நீரினை விவசாயத்தற்காகவும், குடிநீருக்காகவும், ஏனைய தேவைகளுக்காகவும் பயன்படுத்துகின்ற பொது மக்கள் நோய்வாய்ப்படும் அபாயம் காணப்படுவதாக பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே இப்பகுதியில் குப்பைகளை போடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவே குப்பைகள் போடுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் பொது மக்கள வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ஹற்றன் விசேட நிருபர்

 
Wed, 09/01/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை