அமைச்சர் சமலுக்கு கொரோனா தொற்று

அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் அமைச்சர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

இதேவேளை அமைச்சர்கள் மற்றும், இராஜாங்க அமைச்சர்கள் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Sat, 09/11/2021 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை