அத்தியாவசிய பொருட்களை நியாய விலையில் வழங்கவே அவசரகால சட்டம்

வேண்டாமென்கிறதா ஏதிரணி; அமைச்சர் அலி சப்ரி கேள்வி

ஜனாதிபதி வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் சரத்துகள் என்னவென்று தெரியாமல் எதிரணி பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பான சரத்தை நாடுமுழுவதும் செயற்படுத்தி நியாய விலையில் பொருட்களை வழங்கவே அவர் இதனை வெளியிட்டுள்ளார். அதனை செய்ய வேண்டாமென்றா எதிரணி கோருகிறதென நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற, அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது மேலும் குறிப்பிட்ட தாவது,

இதனை பயன்படுத்தி மக்களின் உரிமைகளை தடுக்க முயல்வதாக எதிரணி குற்றஞ்சாட்டியது. இந்த சட்டத்தில் அவ்வாறு ஏதாவது உள்ளதா? ஜனாதிபதியின் அறிவிப்பை தெளிவாக வாசிக்காது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் இரண்டாவது சரத்திற்கமைய அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பான சரத்தை நாடுமுழுவதும் செயற்படுத்துவதாகவே அவர் அறிவித்துள்ளார். டொலரை கட்டுப்படுத்துமாறும் சம்பளத்தை அதிகரிக்குமாறும் ஆசிரியர் சம்பள பிரச்சினை தீர்க்குமாறும் சகலருக்கும் தடுப்பூசி வழங்குமாறும் எதிரணி கோருகிறது. ஏனைய நாடுகளை போன்று இந்த தொற்று நிலையிலிருந்து மீள எதிரணி ஒத்துழைக்க வேண்டும். அரசுக்கு வருமானம் கிடைக்கும் 03 வழிகள் உள்ளன. சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் 05 பில்லியன் வருமானம் கிடைத்தது. அது பூச்சியமாக மாறியுள்ளது. எதிரணி ஆட்சிக்கு வந்தால் இதனை மாற்ற முடியுமா? அந்நிய செலாவணி குறைந்துள்ளது. ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. உள்நாட்டில் வருமானம் கிடைக்கும் கலால் வரி, வருமான வரி, சுங்க இறக்குமதி வரி என்பனவும் பெருமளவு குறைந்துள்ளது.

இவற்றை அறிந்து கொண்டு 28 வருடங்களாக தீர்க்கப்படாத ஆசிரியர் பிரச்சினையை தீர்க்குமாறு கேட்கின்றனர். இதனை ஒரே இரவில் தீர்க்க முடியுமா?

ஷம்ஸ் பாஹிம், நிசாந்தன் சுப்பிரமணியம்

 

 

Tue, 09/07/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை