சென்னையிலிருந்து கடல் மார்க்கமாக ரெயில் பெட்டிகள்

20 பெட்டிகள் நேற்று வந்தடைவு

சென்னையிலுள்ள ICF (Integral Coach Factory) ரெயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 20 புகையிரத பெட்டிகள் கப்பல் ஊடாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  இந்திய கடன் திட்டத்தின் ஊடாக 160 புகையிரத பெட்டிகளை இந்தியா வழங்கவுள்ள நிலையில், இவைகளின் இறக்குமதிக்காக 82.64 டொலர் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டும் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. அதன்படி இந்த ரெயில் பெட்டிகளின் கொள்வனவுக்காக 100 மில்லியன் செலவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 09/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை