ஸ்பெயின் தீவில் எரிமலை வெடிப்பு

ஸ்பெயினின் கனரி தீவுகளில் உள்ள லா பல்மா தீவில் எரிமலை ஒன்று வெடித்து எரிமலைக்குழம்பு அருகில் உள்ள கிராமங்களை நோக்கி பாய ஆரம்பித்துள்ளது.

எரிமலைக் குழம்புகள் கக்கும் நிலையில் பல வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டிருப்பது வானில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் மூலம் தெரிகிறது.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சஸ் அந்த தீவுக்கு சென்றிருக்கும் நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. நிலைமை குறித்து தீவிரமாக அவதானித்து வருவதாகவும் இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் உதவிக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த எரிமலை கடைசியாக 50 ஆண்டுகளுக்கு முன்னரே வெடித்தது. இந்த எரிமலை உள்ள லா பல்மா தீவில் சுமார் 80,000 மக்கள் வசிக்கின்றனர்.

எனினும் அண்மைய நாட்களில் இந்த எரிமலையை சுற்றி 22,000க்கும் அதிகமான தடவைகள் அதிர்வுகள் ஏற்பட்ட நிலையில் அவதான நிலை அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் எரிமலைக்கு அருகில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Tue, 09/21/2021 - 14:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை