நிலக்கரி திட்டங்களுக்கான நிதியை நிறுத்துகிறது சீனா

வெளிநாடுகளில் உள்ள நிலக்கரித் திட்டங்களுக்கு நிதியாதரவை நிறுத்தப்போவதாக சீன ஜனாதிபதி சி ஜின்பிங் அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் சி இவ்வாறு கூறினார்.

உலகில் கரியமில வாயுவை மிக அதிகமாக வெளியேற்றும் நாடாக சீனா உள்ளது. 2060க்குள் நாட்டின் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைப்பதற்கு முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும் என்று சி உறுதி கூறினார்.

வளரும் நாடுகளில், சுற்றுப்புறத்திற்கு உகந்த, குறைவான கரியமில வாயு வெளியேற்றத் திட்டங்களை உருவாக்குவதற்குச் சீனா கூடுதல் ஆதரவு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் நிலக்கரி ஆலைகளை இனி கட்டப்போவது இல்லை என்றும் சி உறுதி அளித்தார்.

சீனா பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களின் கீழ் இந்தோனேசியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் நிலக்கரித் திட்டங்களுக்கு நிதி அளித்து வருகிறது. எனினும் பாரிஸ் காலநிலை உடன்படிக்கையின் கடப்பாடுகளை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த நிதிகளை நிறுத்துவதற்கு சீனாவுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் சீனா உள்நாட்டு ஆற்றல் தேவைக்கு நிலக்கரியை பெரிதும் நம்பி உள்ளது.

Thu, 09/23/2021 - 07:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை