தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளின்போது அநீதியா?

முறைப்பாடுகளை பெற பிரத்தியேக அதிகாரி நியமனம்

தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும்போது இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிலையங்கள் சங்கத்தின் தலைவர் ஆனந்த குருப்புஆராச்சி கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்தார். வைத்தியசாலை கட்டமைப்புக்குள் இதற்கு தீர்வு காண்பதற்கான பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்படுமாயின், அது குறித்து முறையிடுவதற்காக வைத்திய அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஒவ்வொரு தனியார் வைத்திய நிறுவனத்திற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாக்கல் செய்யப்படும் முறைப்பாடு, அந்த வைத்திய நிறுவனத்தின் உயர் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, ஆராய்ந்து நியாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் திருப்தியடையாதவர்கள், நெறிமுறை குழுவில் முறையிடலாம் என தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்கள் சங்கத்தின் தலைவர் ஆனந்த குருப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.

Wed, 09/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை