வழக்கு ஒக்டோபருக்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடந்த 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலை அண்மித்த காலப்பகுதியில் திவி நெகும திணைக்களத்தின் கீழ் ஜீ.ஐ. குழாய்களை கொள்வனவு செய்து அதனை உள்ளூராட்சி மன்றங்களுக்கு விநியோகித்ததாக கூறப்படும் விவகாரத்தில் அரசாங்கத்துக்கு 33 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக கூறி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் முன்னாள் திவினெகும பணிப்பாளர் கித்சிரி ரணவக்கவுக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 8 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் இவ் வழக்கு விசாரணைக்கு வந்த போதே அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

Fri, 09/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை