கொழும்பில் இலவச கொவிட் பரிசோதனை

நேற்று முதல் ஆரம்பம்

கொழும்பு மாநகர சபை பகுதியில் நிரந்தர மற்றும் தற்காலிகமாக வசிப்பவர்களுக்கு நேற்று முதல் இலவச கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.  இச்சேவையில் துரித அன்டிஜன் பரிசோதனை செய்து கொள்ள முடியும் என்று கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். அதன்படி, ஞாயிறு தவிர்ந்து தினமும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை இலவச கொரோனா பரிசோதனைகள் பொரளை கெம்பல் மைதானத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Thu, 09/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை