பொருளாதாரத்தின் வலுவான வளர்ச்சிக்கு இந்தியா தயார்

இந்தியாவின் பருவநிலைப் பொருளாதாரக் கட்டமைப்பு வலுவானது என்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள், அரசாங்கத்தின் மூலதனச் செலவுகளின் உந்துதல் மற்றும் வேகமான தடுப்பூசி வழங்குவது ஆகியவற்றின் மூலம் வலுவான வளர்ச்சிக்கு நாடு தயாராக உள்ளது என்றும் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்ரமணியம் தெரிவித்தார்.

இந்த வளர்ச்சி எண்ணிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கம் எதிர்வுகூறிய கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடனடி 'வி' வடிவ மீட்சி ஒன்றை உறுதி செய்வதாக முதல் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவு உள்ளது என்றார்.

கொவிட்-19 இரண்டாவது அலைத் தாக்கம் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையிலும், ஓர் ஆண்டுக்கு முந்திய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஏப்ரல் மற்றும் ஜூன் காலண்டில் 20.1 வீதம் இந்திப் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது.

Fri, 09/03/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை