மருந்து விலைகள் அதிகரிக்காது

அரசாங்கம் உறுதியளிப்பு

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தரவுத்தளத்தில் இருந்து 5,925 கோப்புகள் காணாமல் போனதைத் தொடர்ந்து மருந்துகளின் விலை அதிகரிக்கும் நிலைமையோ அல்லது கறுப்புப் பட்டியலிலுள்ள நிறுவனங்கள் மருந்துகளை இறக்குமதி செய்யும் ஆபத்துகளோ இல்லையென அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தரவுத்தளத்தில் இருந்து 5,925 கோப்புகள் காணாமல் போனதை இராஜங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உறுதிப்படுத்தினார்.

காணாமல் போன கோப்புகளில் 3,137 மருந்துகளின் மறு பதிவு தொடர்பான கோப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் மருந்து விலை உயருமென்ற அபாயம் இல்லை அத்துடன் நிறுவனங்கள் பல்வேறு பெயர்களில் கருப்பு பட்டியலிலுள்ள மருந்துகளை இறக்குமதி செய்ய முடியும் என்ற நிலைமையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

2015 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் மருந்து மாஃபியா செழித்து வளர்ந்திருந்தாலும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இத்தகைய குழுக்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன.

எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மருந்து மாஃபியாவின் ஒரு பகுதியாக இருக்கும் நிறுவனங்கள் பல்வேறு பெயர்களில் மருந்துகளை இறக்குமதி செய்து இலாபம் பெறும் செயற்பாடு இதன் மூலம் நிறுத்தப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தரவுத்தளவுகளை நீக்கியது அந்தக் குழுவின் திட்டமிட்ட செயலாக இருக்கலாம்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை அடையாளம் காண குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

 

Wed, 09/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை