கடவத்தை பகுதியில் சீல் வைக்கப்பட்ட களஞ்சியசாலை அத்துமீறி திறந்து சீனி விற்பனை

STF சுற்றிவளைப்பில் ரூ.530 மில். பெறுமதியான சீனி மீட்பு

பொலிஸ் விசேட செயலணி அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்பின் போது 530 மில்லியன் ரூபா பெறுமதியான சீனி கைப்பற்றப்பட்டுள்ளது.  

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையை அத்துமீறி திறந்து சீனியை விற்பனை செய்துவந்த போது விசேட பொலிஸ் செயலணியினர் சுற்றிவளைப்பு செய்ததில் 530 மில்லியன் ரூபா பெறுமதியான சீனியும் அதனை போக்குவரத்து செய்ய பயன்படுத்தப்பட்ட லொறியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.  

விஷேட செயலணியின் கட்டளையிடும் அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வருண ஜயசுந்தரவின் நேரடி கண்காணிப்பின் கீழ் கடவத்தை கோணஹேன பிரதான முகாமுக்கு பொறுப்பான அதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிஜே சில்வெஸ்டர் விஜேயசிங்கவின் வழிகாட்டலுக்கு அமைய பொலிஸ் விசேட செயலணி அதிகாரிகளினால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கடவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்  

Sat, 09/11/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை