நாட்டை விட்டு வெளியேற ஆப்கான் எல்லைகளில் பெரும் மக்கள் கூட்டம்

ஆப்கானில் இருந்து வெளிநாட்டு படைகள் வெளியேறி தலிபான்கள் அங்கு அதிகாரத்தை பெற்றிருக்கும் நிலையில் நாட்டில் இருந்து வெளியேற எல்லை பகுதிகளில் மக்கள் கூடி இருப்பதோடு வங்கிகளில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

வங்கிகள், மருத்துவமனைகள் மற்றும் அரச இயந்திரத்தை தொடர்ந்து இயக்குவதில் தலிபான்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கைபர் கணவாய்க்கு கிழக்காக பாகிஸ்தானுடனான தொர்காம் எல்லைக்கடவையில் பெரும் எண்ணிக்கையான ஆப்கானியர்கள் கூடியிருப்பதாக பாகிஸ்தான் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆப்கான் மற்றும் ஈரானுக்கு இடையிலான எல்லை பகுதியான இஸ்லாம் காவாவிலும் பெரும் எண்ணிக்கையானவர்கள் கூடியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலத்தால் சூழப்பட்ட நாடான ஆப்கானில் அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வெளியேற்ற நடவடிக்கைகள் முடிவுற்ற நிலையிலேயே பெரும் எண்ணிக்கையானவர்கள் எல்லை பகுதிகளை நோக்கி விரைந்துள்ளனர். தலிபான்கள் தமது புதிய அரசு பற்றி அறிவிப்பை இன்னும் வெளியிடாத நிலையில் அந்தக் குழுவுடன் நெருக்கம் கொண்டுள்ள அண்டை நாடான பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு, ஒரு சில நாட்களில் ஒருமித்த புதிய அரசு ஒன்று பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது.

Thu, 09/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை