தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பதா நீக்குவதா ?

ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் இன்று தீர்மானம்

நாட்டில் நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும்  அமுல்படுத்துவதா, இல்லையா என்ற தீர்மானம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் இன்று நடைபெறவுள்ள கொரோனா வைரஸ் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி அமர்வின்போது அதற்கான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 6ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. இவ் ஊரடங்குச் சட்டம் கடந்த ஒகஸ்ட் 20ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இலங்கை தொடர்பான உலக சுகாதா ஸ்தாபனத்தின் நிபுணர் குழுவினர் தற்போதைய முடக்கல் நிலையை எதிர்வரும் ஒக்டோபர் 02 வரை அல்லது குறைந்தபட்சம் செப்டெம்பர் 18 வரை நீடிக்குமாறு பரிந்துரைத்துள்ளனர்.

இந்த பரிந்துரை செயற்படுத்தப்பட்டால் கொவிட்-19 தொற்றிலிருந்து ஆயிரக்கணக்காண உயிர்கள் பாதுகாக்கப்படுமென்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 09/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை